உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர கடுமையாக உழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.
உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகள் விவசாயிகளுக்கு வருமானம் பெறுவதற்கு புதிய வழியை ஏற்படுத்தும்.
விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கு இலக்கை தீர்மானித்தோம். அந்த இலக்கை அடைந்திருக்கிறோம். கடந்த 5 வருடங்களில் உணவு தானிய கொள்முதல் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், மற்றொரு புறத்தில் சமாஜ்வாதி கட்சி, உங்களை பழி வாங்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன் மக்கள் அவர்களுக்கு அஞ்சி இடம்பெயர்ந்தது தொடர்பான தகவல்கள் தினசரி வெளியாகியது. கடந்த ஐந்து வருடங்களில் யோகியின் அரசாங்கம் இந்த நிலையிலிருந்து உத்திரப்பிரதேசத்தை மீட்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார்.