உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20, 4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ல் நடைபெறும்.
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல்கட்ட தேர்தல், மார்ச் 3ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தல் என்று தகவல் வெளியாகியது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்களுக்கு தடை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.