சேலத்தில் உள்ள அன்னதானப் பட்டியில் தச்சுத் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
தாதகாப்பட்டி யில் உள்ள முணாகரடு பகுதியைச் சேர்ந்த ஜீவா 29 வயது.அவரது மனைவி கவிதா வயது 25.ஜீவாவிற்கு மது பழக்கம் அளவுக்கு மீறி இருந்ததால் ஜீவா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு அவரது மனைவி தகவல் கொடுத்தார். அதில் அவர் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.பின்னர் ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவை காவல்துறையினரிடம் கொடுத்த போது அவரின் முகம், வாய், கழுத்து பகுதியில் காயம் உள்ளதாக தெரியவந்தது.
இதனால் சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி மற்றும் நண்பரான ராஜாவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்து விட்டோம் என்று வாக்குமூலம் அளித்தனர். மேலும் வாக்கு மூலத்தினல், போது கவிதா மற்றும் ராஜாவின் கள்ளக்காதலை கண்டித்து ஜீவாவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். இதனால் கடந்த 16 ஆம் தேதி அன்று அதிக குடிபோதையில் இருந்த ஜீவாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்தனர். பின்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.