Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. வெளியான திடீர் முடிவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் நாளை 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வாகன வசதிகள் உள்ளிட்ட மற்ற வசதிகள் இன்னும் நிறைவடையாததால் தனியார் பள்ளிகள் சிறிய வகுப்புகளுக்கு நேரடியாக பாடம் நடத்துவதை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில பள்ளிகள் அடுத்த வாரம் முதல் சிறிய வகுப்புகளுக்கு பாடம் நடத்த திட்டமிட்டுள்ளன. அதே சமயத்தில் வழக்கமான குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |