நடிகர் பிரேம்ஜி தன் திருமணம் குறித்து வெளியிட்ட தகவலுக்கு தனக்கு பொறாமையாக இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.
நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் பிரேம்ஜி, தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கடவுள் பக்தி அதிகம் கொண்ட பெண் தான் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். எனவே அப்படிப்பட்ட பெண்ணை தேடி வருவதாக அவரின் தந்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பிரேம்ஜி தனது திருமணம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “என் வழி ஆன்மீக வழி. இதனால் திருமணம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. நாம் திருமணம் செய்ய நினைத்தால் 10 வருடங்களுக்கு முன் செய்து கொண்டிருப்பேன். எனக்கு திருமண வாழ்வில் ஈடுபாடு கிடையாது. சிங்கிளாக தான் இருப்பேன்” என்று கூறிவிட்டார்.
இதுபற்றி அவரின் சகோதரரான இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்திருப்பதாவது, எங்கள் கூட்டத்தில் எல்லோருக்கும் திருமணமாகி குழந்தையுடன் இருக்கிறோம். ப்ரேம்ஜி மட்டும் சிங்கிளாக சந்தோஷமாக இருப்பதைப் பார்ப்பதற்கு பொறாமையாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.