தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜுனா சமந்தா குறித்து நான் கூறியதாக வெளியான தகவல், உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் நாகார்ஜுனா சமந்தா எங்களின் குடும்பத்திலிருந்து பிரிந்தாலும் என்றைக்கும் என் மகள் தான் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என்று நாகார்ஜுனா தெரிவித்ததாக வெளியான தகவல் வைரலாக பரவியது. இது பற்றி அறிந்த அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இணையத்தளத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா குறித்து நான் கூறியதாக வெளியிடப்பட்ட தகவல் உண்மை கிடையாது. இது நான்சென்ஸ். வதந்திகளை செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று மீடியா நண்பர்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.