உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து கட்சிகளும் கடுமையாக முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டிகள் இருந்தாலும், கடுமையான போட்டி என்னவோ பாஜகவிற்கும் அகிலேஷ் யாதவ்வின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று மீண்டும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என கூறியுள்ளது. ஆனால் இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அகிலேஷ் யாதவ் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என எண்ணி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
அதாவது தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கூறியுள்ளார். அதாவது ஸ்டாலின் தனக்கு ஆதரவாக பேசி கடிதமொன்றை எழுதி அனுப்ப வேண்டும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அதோடு பாஜகவிற்கு எதிராக மற்ற காட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டது போன்ற புகைப்படத்தை தன்னுடைய கட்சி போஸ்டர்களில் இடம் பெற செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ஆலோசித்த ஸ்டாலின் தமிழகத்தில் காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு உத்தரபிரதேசத்தில் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எவ்வாறு ஆதரவு அளிப்பது என ஆலோசித்து வருகிறார்.
இது குறித்து அறிந்த அகிலேஷ் யாதவ் தமிழகத்தில் தான் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து உள்ளதே தவிர உத்தரபிரதேசத்தில் அல்ல எனவே எனக்கு ஆதரவு அளிப்பதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி காங்கிரஸ் உத்திரபிரதேசத்தில் மிகவும் சொற்பமான இடங்ளையே கைப்பற்றும் எனவே எனக்கு ஆதரவு அளிப்பதில் எந்த சிக்கலும் வராது என அவர் கூறியுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.