Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 லட்சம் பறவைகள்…. கணக்கெடுப்பில் வெளியான தகவல்…..!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 10 கடலோர மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் 10 லட்சம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதில் வனதுறையினருடன் தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500 பேர் ஈடுபட்டனர். சிறு கொசு உள்ளான், சதுப்பு மண் கொத்தி, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், நாமத்தலை வாத்து, கருவால் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |