செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புறோம். திமுகவின் உண்மை முகம் சுலபமாக வெளிப்படத் தொடங்கி விட்டது. பத்து வருடமாக காஞ்சு போயிருந்த திமுகவினருக்கு, காஞ்சமாடு மாடு புகுந்த மாதிரி புகுந்திருக்கிறார்கள். விடியல் அரசு என சொன்னாங்க. திமுகவிற்கு விடியலுக்காக அவங்க தெருத்தெருவா அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
திமுக எப்படிப்பட்ட கட்சி என தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருக்கின்றேன். கவிஞர் வைரமுத்து கவிதை சொன்னேன்.. பட்டுவேட்டி காக கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டு விட்டது என்று சொன்னார். அது எது பொருந்துமோ, இல்லையோ திமுக ஆட்சிவந்துச்சுனா பொருந்தும் என சொன்னேன்.
அப்படி தான் இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டது. இதை மக்கள் உணருவார்கள். அதுதான் ஆறு மாதம் ஆகிவிட்டது எல்லாம் ஆரம்பித்து விட்டார்களோ என்று சொல்கிறேன். இப்பதான் ஆட்சிக்கு வந்து இருக்காங்க. அவுங்களுக்கு ஒரு டைம் கொடுக்கணும்னு. பேங்கில் கூட டைம் 6மாசம் கொடுப்பாங்க. அது மாதிரி டைம் கொடுக்கணும்னு சொல்லி இருந்தேன். இப்போ ஆறு மாதம் தாண்டி முழு வேகத்தில் இறங்கி விட்டார்கள், அவர்களின் வேலைகளில், அதுதான் பொங்கல் பரிசு எல்லாம் என விமர்சித்தார்.