Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு…50 வயது பெண்ணை கற்பழித்த 17 வயது சிறுவன்…. என்ன காரணம் தெரியுமா…? பகீர் தகவல்….!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட 17 வயது சிறுவன் ஒருவன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு அந்த பெண் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினர் கூட்டி விடக்கூடாது என்பதற்காக அருகில் இருந்த சுத்தியலால் அந்த பெண்ணின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் அந்தப் பெண் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுவன் அந்த வீட்டில் இருந்த 2 செல்போன்களை திருடிவிட்டு வேகமாக தப்பி ஓடியுள்ளார். சிறுவன் வீட்டிலிருந்து ஓடுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சையின் போதுதான் அந்த பெண் கற்பழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |