Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகள் திறப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி (இன்று) வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1 (நாளை) முதல் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த வகையில் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சுழற்சி முறையில் வகுப்புகள் கிடையாது. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை முதல் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை முதல் வகுப்புகள் நடைபெற இருப்பதால் பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |