Categories
அரசியல்

“தமிழ்நாட்டில் மத வெறியை ஏற்படுத்தி”… வன்முறையை உருவாக்கி…. பா.ஜ.க குளிர் காய்கிறது…. முதல்வர் கடிதம்…!!!

தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி, வன்முறையை ஏற்படுத்தி பா.ஜ.க குளிர் காய்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

தமிழக முதலமைச்சரான மு.க ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியின் நற்பெயரை சிதைப்பதற்காக வெறும் பொய்யை மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் அதிமுகவால் கடந்த 10 வருடங்களில் தமிழக பட்ட பாடை மக்களிடம் நினைவுப்படுத்துங்கள்.

நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் மனதில் மதவெறியை உண்டாக்கி வன்முறையை ஏற்படுத்தி, குளிர்காய எண்ணும் பாஜகவின் சீரழியக்கூடிய அரசியலை வெளிப்படுத்துங்கள் என்று எழுதியிருக்கிறார்.

மேலும், மதவாத அரசியலுக்கு எப்போதும் இடம் தராத தமிழ்நாட்டு மக்களின் தனித்தன்மையையும் நினைவு கூறுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.க ஆட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எப்போதும் தொடரும் விதத்தில் களப்பணி செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

Categories

Tech |