இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இந்தி முன்னணி நடிகை கஜோலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை கஜோல் அவரின் இணையதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.