நியூயார்க்கில் இருக்கும் ஒரு பூங்காவின் புதரில் சிதைந்து போன சடலம் எலும்புக்கூடாக கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் சென்ட்ரல் பூங்காவில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் எலும்புகூடு கண்டறியப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒரு நபர் அந்த பூங்காவில் ஜாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒரு கூடாரம் இருப்பதை பார்த்தவாரே சென்றதால் கால் தடுக்கி புதரின் மேல் விழுந்து விட்டார்.
அதன்பின்பு தான் அவர் எலும்புக்கூட்டின் மேல் விழுந்தது தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். காவல் துறையினர் இதுபற்றி தெரிவித்திருப்பதாவது, “அந்த உடல் சிதைந்து போன நிலையில் உள்ளது. எலும்புகள் தான் அதிகமாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் எத்தனை நாட்களாக கூடாரம் உள்ளது மற்றும் இறந்து போன நபர் யார்? என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. எனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.