Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்கிட்ட லஞ்சம் கேட்கிறார்…. கையும் களவுமாக சிக்கிய அதிகாரி…. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் செயல்….!!

நிலம் அளவீடு செய்வதற்கு லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சேகர் தனது கிராமத்தில் இருக்கும் 22 சென்ட் நிலம் மற்றும் 3 வீட்டுமனைகளை அளவிடுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன்பின் சேகரை கடந்த டிசம்பர் மாதம் நில அளவை குறித்து தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளராக வேலை பார்க்கும் பாலாஜி என்பவர் நேரில் அழைத்து பேசியுள்ளார்.

அப்போதும் சேகரிடம் 4 இடங்களை அளவீடு செய்ய 8,000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இது பற்றி சேகர் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் ஒரு மாத காலமாக பாலாஜியை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து சேகரிடம் ரசாயனம் தடவிய 8,000 ரூபாயை லஞ்சம் ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்துள்ளனர். பின்னர் பாலாஜி சேகரிடம் லஞ்சம் வாங்கும் போது அவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பாலாஜிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |