மீன ராசி அன்பர்களே…!!! இன்று நீங்கள் இறைவனை வழிபட்டு எந்த காரியத்தையும் மேற்கொள்ளவேண்டும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு பிற இனத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது மட்டும் இன்று நன்மையை கொடுக்கும். அதே போல உங்களுடைய வேலைகளை நீங்கள் கவனமாக செய்வது நல்லது. எதிலும் நிதானம் இருக்கட்டும். உங்களுக்கு வருமானம் இன்று நல்லபடியாகவே வந்து சேரும்.
வசதி வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்களுடன் சுமுக நிலையே காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல நேரிடும். உங்களுடைய மனசுக்கு ஏற்றார் போல் இன்று வரங்கள் வந்து அமையும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை கலகலப்பான சூழல் காணப்படும். இன்று சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகளை நீங்கள் பெறக்கூடும். அதேபோல அக்கம்பக்கத்தினரின் அன்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பணமும் கையில் வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்