நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், ஊட்டி, நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக 45 பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி நகராட்சியில் மத்திய பேருந்து நிலையம், ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பு உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணம் இன்றி, பணம் எடுத்து செல்ல கூடாது. அதனை மீறி பணத்தை எடுத்து சென்றால் உரிய ஆவணத்தை காண்பித்து திரும்ப பெற்று கொள்ளலாம். இதனை அடுத்து நீண்ட நேரம் காக்க வைக்காமல் வாகன சோதனை செய்து அனுப்புமாறு பறக்கும் படையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.