Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உடல் நசுங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. கிருஷ்ணகிரியில் பயங்கர சம்பவம்…!!

யானை மிதித்ததால் உடல் நசுங்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தாண்டபுரம் கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் தனது ஆடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். மாலை நேரமாகியும் கன்னியப்பன் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் வனப்பகுதிக்கு சென்று அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கண்ணியப்பனின் உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி வனச்சரகர் சீதாராமனின் தலைமையில் வனத்துறையினர் முதியவரை தேடியபோது உடல் நசுங்கிய நிலையில் கன்னியப்பனின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது குட்டிகளுடன் யானைகள் சுற்றி திரிந்ததை அறியாத கன்னியப்பன் ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த யானை கன்னியப்பனை மிதித்து கொன்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி கன்னியப்பனின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளார்.

Categories

Tech |