Categories
மாநில செய்திகள்

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தடை…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…!!!!

சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரச்சாரங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மேல் ஒரு அரங்கில் கூடி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அதோடு பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முக கவசம் அணியாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வேட்பாளர்கள் குழுவாக சென்று பிரச்சாரம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை தவிர்க்க 45 பறக்கும் படைகள் ஈடுபட்டுள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Categories

Tech |