Categories
அரசியல்

“இத மட்டும் எங்களுக்கு கொடுத்துருங்க”…. மேயர் பதவிக்கு பாஜக போடும் ஸ்கெட்ச்…. ஓ இதுக்கு பின்னாடி இவர்தா இருக்காரா?….!!!

அதிமுக கூட்டணியில் பாஜக முக்கிய இடங்களுக்கான மேயர் பதவியை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக முக்கிய மாநகராட்சியின் மேயர் பதவிகளைக் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் திமுக -காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி பொருத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் முண்டியடித்துக்கொண்டு எனக்கு உனக்கு என்று போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் மெஜாரிட்டி கட்சிகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை கருத்தால் அதிமுக பாஜக கூட்டணி பிளவுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி சந்தித்து சமாதானம் செய்துவிட்டதால் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என கூறப்படுகிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் பாஜக தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாஜகவிற்கு ஆதரவு அதிகம் இதனை மனதில் வைத்து பாஜக தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை வைத்து வென்று விடலாம் என பாஜக எண்ணியிருந்தது சரியான கருத்து தான் என்றாலும் கோவை நகராட்சியை பாஜக ஏன் கேட்டது என்பது குறித்து யோசித்துப் பார்த்தபோது அது குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதாவது முன்னால் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல சிக்கல்களிலிருந்து மீண்டு வந்தபோது சொந்தக் கட்சியான அதிமுக அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. ஆனால் அந்த சமயத்தில் தோளுக்கு தோள் கொடுத்து உதவிய பாஜகவிடம் நயினார் நாகேந்திரன் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்து பாருங்கள் எனது தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்று காட்டுவேன் என கூறியுள்ளாராம். இதனை மனதில் வைத்து கொங்குமண்டலத்தை பாஜக கேட்டுள்ளது என கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் மக்களின் முடிவு என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Categories

Tech |