Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…!! அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் ஊதிய உயர்வு….!!

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான தொகை சம்பள உயர்வு கிடைக்கும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. கான்பெரி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலைமை தற்போது திரும்பியுள்ளது இதனால் பல்வேறு நிறுவனங்கள் பழையபடி லாபம் ஈட்ட தொடங்கியுள்ளதால் ஊழியர்களுக்கு கட்டாயம் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

2019ஆம் ஆண்டு அதாவது கொரோனாவுக்கு முன்னர் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு 9.25 சதவிகிதமாக இருந்தது. இதுகுறித்து பல்வேறு நிறுவனங்கள் கூறுகையில், தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஊழியர்களின் நலனுக்காக செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலக செட்டப் அமைத்து தரவும் நிறுவனங்கள் முன்வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |