மது விற்பனை செய்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் இருக்கும் அண்ணாநகர் பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது கடையில் 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணிமேகலை மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அசோக், குமார்ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.