Categories
அரசியல்

“புதிய வைரஸ் பரவுது!”…. பள்ளிகளை திறக்க வேண்டாம்…. விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தமிழக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதாவது தற்போது “நியோகோவ்” என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விஞ்ஞானிகள் இந்த புதிய வகை வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளனர். எனவே தமிழக அரசு பள்ளிகள் திறப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பானதா ? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் தமிழக அரசு நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ததா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதேசமயம் தமிழக அரசு 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |