உக்ரைனில் எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம். இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட தயாராகுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவும் வகையில் கிழக்கு ஐரோப்பிய, நோட்டா நாடுகளுக்கு தங்கள் படைகளை அனுப்ப உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அமெரிக்கா விமானப்படை, உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை டோவர் விமானப்படைத் தளத்திலிருந்து அனுப்ப தொடங்கியிருக்கிறது. மேலும் 8500 அமெரிக்க படை வீரர்களும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.