சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் பகுதியில் முத்தையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தையன் முடியனூர் கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பின் அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்தையனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மினி சரக்கு வாகன ஓட்டுனர் ஜெகதீஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.