Categories
தேசிய செய்திகள்

Breaking: ஒரே நாளில் 3,35,939 பேர் டிஸ்சார்ஜ்… ஆனால் உயிரிழப்பு அதிகம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட் …!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை குறைந்து மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்).

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,35,939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்கு 20,04,333 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 13.88% எனவும் இதுவரை 1,65,04,87,260 தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |