சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 56.55 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவிலிருந்து முதன்முதலாகத் தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
இருப்பினும் கொரோனா உருமாறி உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவுவதால் அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56.55 இலட்சத்தை தாண்டியுள்ளது.