தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு வீழ்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புகள் தற்போது 30 ஆயிரத்திலிருந்து 29 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் இம்மாத இறுதியில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு மாநிலம் முழுவதும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளி, கல்லூரிகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும் திறக்க அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கும் நடவடிக்கையினை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுக்கு வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளது.
ஏனென்றால் தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கடந்த ஒரு சில வாரங்களாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 29 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பெற்றோர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இதனால் அரசு பள்ளிகளை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளது. இருப்பினும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் அரசு பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளது. எனவே அரசின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா ? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.