பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. இந்நிலையில் பிரியா பவானி சங்கர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “நீ ஒரு மோசமான டீம் பாயாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி விட்டாய். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எப்போதும் உனக்கு அன்பும், பாசமும், நட்பும் கிடைக்க வாழ்த்துகிறேன். இந்த போட்டோ உனக்கு பிடிக்காது என்று தெரியும் வேணும்னு தான் நான் இந்த படத்தை பதிவிட்டேன்.” எனக் கூறியுள்ளார் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.