ரொனால்டோ விடுமுறையை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்ற சமயத்தில் அவருடைய காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு 50,00,000 ரூபாய் செலவில் அந்நாட்டிலுள்ள மிக உயரமான கட்டிடத்தில் ஜார்ஜினோவின் புகைப்படத்தை 3 நிமிடங்கள் ஒளிர செய்துள்ளார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தனது காதலியான ஜார்ஜினோவுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு ரொனால்டோ துபாயில் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலிபாவில் ஜார்ஜினோவின் புகைப்படத்தை 50,00,000 ரூபாய் செலவில் 3 நிமிடங்கள் ஒளிர செய்துள்ளார்.
இந்த வீடியோவை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.