Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

“உலகின் ஒரே கேப்டன் தோனி”…. ‘தல’யை புகழ்ந்த அமைச்சர்..!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் “தல எம்.எஸ்.தோனி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்திய அணிக்குள் நுழைந்தார். இதனை அவரது ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் மூலம் சமூகவலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இவர் அணிக்குள் நுழைந்ததும் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது. இவரது கேப்டன்சியில் இந்திய அணி பல கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. தற்போது நடந்து முடிந்த உலக கோப்பைக்கு பிறகு அணியில் இவர் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலர் தோனி ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

இதில் பல அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அணியில் தோனி இல்லையென்றால் தோனியை மறந்து விடுவார்களா என்றால் துளியும் வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது மட்டுமில்லை எப்பொழுதுமே ரசிகர்கள் அவரை மறக்காமல் கொண்டாடி வருகின்றனர். தற்போது ஐபிஎல்லில் அவரது ஆட்டத்தை காண வெறித்தனமாக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

Image result for SP Velumani

இந்த நிலையில் தமிழக ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் வென்ற உலகின் ஒரே கேப்டன் தோனி . கிரிக்கெட் உலகின் ‘தல’யை நாம் எப்போதும் அன்பாக நினைவில் வைத்திருப்போம். தல தோனி இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது 15 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்கிறார். வாழ்த்துக்கள் கேப்டன் கூல் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |