தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு முறை குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களுடைய ID மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரிய பதவிக்கான தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி பிப்ரவரி 12ஆம் தேதி காலை தமிழ் முதல் முதல் தாளும் மாலை தமிழ் இரண்டாம் தாள் தேர்வுகளும் நடைபெறும்.
பிப்ரவரி 13ஆம் தேதி காலை வர்த்தகம், வீட்டு அறிவியல், இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட தேர்வுகளும் மாலை இயற்பியல் தேர்வும் நடைபெறும்.
பிப்ரவரி 14ஆம் தேதி காலை புவியியல், அரசியல் அறிவியல், வரலாறு உள்ளிட்ட தேர்வுகளும் மாலை வேதியியல் தேர்வும் நடைபெறும்
பிப்ரவரி 15ஆம் தேதி காலை பொருளாதாரம், தாவரவியல், உயிர் வேதியியல் ஆகிய தேர்வுகளும் மாலை உயிரியல், உடற்கல்வி ஆகிய தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.