தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு நீதி வழங்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நகாப்பட்டினம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யாவிற்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதற்கு இளைஞரணி நகரத் தலைவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.