கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தோன்றியதால், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நேற்று இரவில், என் கொரோனா பரிசோதனைக்கான முடிவு வந்தது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனினும், கொரோனா பாதிப்பு இருப்பதை போல் தோன்றுகிறது.
Last night, I learned that I have been exposed to COVID-19. My rapid test result was negative. I am following @OttawaHealth rules and isolating for five days. I feel fine and will be working from home. Stay safe, everyone – and please get vaccinated.
— Justin Trudeau (@JustinTrudeau) January 27, 2022
எனவே, சுகாதாரத் துறையின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என் உடல்நிலை நன்றாக இருக்கிறது. எனவே, வீட்டிலிருந்து பணியாற்றுகிறேன். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். தயவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.