விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து விட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் பயங்கரமாக சூடுப் பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி ஆகியவற்றை தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிப்பார்கள் என்று விஜய் மக்கள் இயக்கத்தினுடைய பொதுச் செயலாளரான புரூஸ்லி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பால் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்..