தனது தோழியை கொஞ்சிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதாக யாஷிகா ஆனந்த் கூறுகிறார் என குற்றம் சாட்டிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா.
யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை ஆவார். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எந்த படமும் இவருக்கு அந்த அளவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின்னர் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் பாண்டிச்சேரி சென்றார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திரும்பி வரும் வழியில் மகாபலிபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகாவும் கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்து தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது உடல் நலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். மேலும் இப்போது பழையபடி போட்டோ சூட்டிங் எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அவ்வாறு அவரின் போட்டோவை பார்த்த ரசிகர் ஒருவர் தோழியை கொன்று விட்டு நீ மட்டும் ஜாலியாக இருக்கிறாய் என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யாஷிகா,” அது ஒரு விபத்து என்று உங்களுக்கு தெரியும். நான் இறக்கும் தருவாய்க்கு சென்று திரும்பியுள்ளேன் . உற்ற தோழியை இழப்பது ஒரு கெட்ட கனவாகும். உங்களைப்போல் வேலைவெட்டி இல்லாமல் நான் இல்லை எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. முதலில் உங்கள் ஐடியில் இருந்து பேசுங்கள் ஒரு பேக் ஐடி கிரியேட் செய்து அதிலிருந்து பேசும் அளவுக்கு என் மீது என்ன பயம்.?” என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.