Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்!…. இனி சந்தைகளில் விற்பனையாகும்?…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கேட்டிருந்தன. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளையும் வழங்கின. இதையடுத்து கொரோனா தொடர்பான நிபுணர் குழு ஜனவரி 19-ஆம் தேதி அன்று தடுப்பூசிகள் சந்தை விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள் 2019-இன் கீழ் இரண்டு தடுப்பூசிகளும் சந்தைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் நேரடியாக பெற்று கொள்முதல் செய்து அதன் மூலம் விற்பனை செய்யலாம்.

அதேசமயம் மெடிக்கல் கடைகளில் தடுப்பூசிகள் விற்பனை செய்யக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் தடுப்பூசி கொள்முதல் மற்றும் விற்பனை செய்யப்பட்ட விவரம் குறித்து மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் கோவிட் இணையதளத்தில் தடுப்பூசி விற்பனை மற்றும் கொள்முதல் தகவல்களை பதிவிட்டிருக்க வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |