Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. எப்படின்னு தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தரையிறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் ஜோஷி ஏஞ்சல் என்பவர் பிரபல இசையமைப்பாளராக திகழ்கிறார். இவர் தனது இசையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜோஷி மற்றும் அவரது மனைவி, குழந்தை உட்பட 9 பேர் தனி விமானத்தின் மூலம் அமெரிக்காவிற்கு சண்டோ டொமினிகோவிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறு புறப்பட்ட விமானத்தில் சில நிமிடத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் விமானத்தை மீண்டும் அங்கேயே தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.

அதன்படி விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அங்கேயே விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தினால் விமானம் முழுவதும் சட்டென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் சிக்கிய ஜோஷி உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இவருடைய இறப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |