Categories
அரசியல்

அதிகாரிகளே இப்படியா செய்யுறது?…. இதை ஏத்துக்கவே முடியாது!…. டிடிவி கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர்.

இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்” என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்கவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமமுக கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்தது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது எழுந்து நிற்காமல் அவமானப்படுத்தியதோடு அதனை அதிகாரிகள் நியாயப்படுத்தியும் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |