Categories
அரசியல்

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது உட்கார்ந்திருந்த அதிகாரிகள்… டிடிவி தினகரன் கண்டனம்…!!!

அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடியரசு தினவிழா அன்று, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனையில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு தி.மு.க வின் எம்பியான கனிமொழி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், கவிஞர் வைரமுத்துவும் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமமுகவின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், இதுபற்றி தெரிவித்திருப்பதாவது, குடியரசு தினவிழா நடந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது எழுந்து நிற்காமல் இருந்ததோடு, அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகளது செயல் கடுமையாக கண்டிக்கக்கூடியது. பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகள் இவ்வாறு இழிவாக நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், வருங்காலத்தில் இதுபோல் நடக்காமல் தடுப்பதும் அவசியம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |