திருச்சி மாவட்டத்தில் உள்ள குமுளூரை சேர்ந்த பாலசுப்ரமணியம் ( 45 ) என்பவருக்கு மீனா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பாலசுப்ரமணியன் அதிகம் சம்பாதிப்பதற்காக வேலை தேடி வெளி நாட்டிற்குச் சென்று விட்டார். பின்னர் அங்கு வேலை பார்த்துக் கொண்டு தனது மனைவி மீனாவுக்கு பணமும் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மீனாவுக்கு செல்போன் மூலமாக சுரேஷ் என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் ரூ.2 லட்சம் செலவு செய்து மீனா சுரேஷை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து வெளிநாடு சென்ற சுரேஷ் மீனாவை மிரட்டி வீடியோ காலில் நிர்வாணமாக வருமாறு கூறியிருக்கிறார். மேலும் மீனா கொடுத்த பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளார். இதனால் வேதனை அடைந்த மீனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.