தமிழகத்தில் புதிதாக இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
அதாவது இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் இடங்களில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் குறித்த கலந்தாய்வு நடைபெறுகிறது.