கரூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் இளைஞர் குமார் பல முறை உடலுறவு கொண்டுள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு வைத்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பமாக உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து மாரிமுத்துவை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.