ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவையின் பொதுச் செயலாளர் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பான முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவையின் பொதுச் செயலாளரான அண்டனியோ ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மென்மேலும் அதிகரிப்பதை நாம் கட்டாயமாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசியதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி 6 மாதங்கள் ஆகியும் கூட அந்நாடு தற்போதுவரை ஊசலாடிக் கொண்டே தான் இருக்கிறது என்றுள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானின் மக்களது அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை அந்நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து நாடுகளும் உதவ முன்வராவிடில் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.