Categories
உலக செய்திகள்

அடைக்கலம் கொடுக்கிறது நீங்கதான்… நாங்க இல்ல… கண்டனம் தெரிவித்த இந்தியா..!!

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு அடைக்கலம் தந்து மற்றும் நிதியுதவி செய்து இந்தியாவுக்கு எதிரான பல சதித் திட்டங்களை செய்து வருவதாக ஐ.நா சபையில் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்தியா தான் பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத்திற்கு காரணம் என்று தவறான தகவலை கூறிய பாகிஸ்தான் ஐநா பிரதிநிதிக்கு தக்க பதிலடி கொடுத்த, ஐநா சபைக்கான நிரந்தர  இந்திய குழுவின் ஆலோசகர் ஆர்.மதுசூதன் பாகிஸ்தானின் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்றினை விவரித்துக் கூறினார்.

அதாவது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஜம்மு காஷ்மீர் ஆகும். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா சார்பாக  அவர் கூறினார்.

Categories

Tech |