Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடகள போட்டியில் வென்ற மாணவி…. பட்டாசு வெடித்து வரவேற்ற ஊர் மக்கள்…!!

கோவாவில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவியை பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாட்டாகுடியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை 1-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கோவாவில் நடந்த தடகள போட்டியில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும் தெற்காசிய அளவில் நேபாளத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து தங்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவி ஜெயஸ்ரீக்கு வாட்டாகுடி கிராம மக்கள் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய பேரூர் தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநில விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர், முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள், வாட்டாகுடி ஊராட்சி மன்ற தலைவர், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மாணவி ஜெயஸ்ரீக்கு நிதி உதவி வழங்கியுள்ளனர். இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 77 சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற ஜெயஸ்ரீ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே எனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |