Categories
அரசியல்

“தேர்வர்கள் மீது வன்முறையா…?” ஏற்கமுடியாது…. பிரியங்கா காந்தி கடும் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ரயில்வே துறையால் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைக்கேடு நடந்திருக்கிறது என்று கூறி தேர்வை ரத்து செய்யுமாறு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில், கயா பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்.

ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறியது, பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும் போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல் நிலையத்தில் தீ வைத்தார்கள். இது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் தீயிட்டு எரித்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வரை இந்த கலவரத்தில் எட்டு நபர்கள் கைதாகியுள்ளனர். இதற்கிடையில் தேர்வர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |