Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை கைவிட்டு உயர்கல்வி கற்க வேண்டும் என்றும் மேல்நிலைக் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடனும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இந்த தேர்வானது பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு அரசு உதவி பெறும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வினை எழுத முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அந்த வகையில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாகவே உதவித்தொகை செலுத்தப்படும். இத்தேர்வு மூலம் 1 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆகவே மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜனவரி 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் இத்தேர்வுக்கான கட்டணத் தொகையாக ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை பெற http://www.dge.tn.gov.in/ அல்லது https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1641974422.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |