Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மக்கள் செலுத்திய பணம்…! ஆட்டைய போட்ட அதிகாரி…. விழுப்புரத்தில் பரபரப்பு …!!

மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் செலுத்தும் மின் கட்டண தொகையை கையாடல் செய்த கணக்கீட்டள்ளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவர் அத்தொகையை கணக்கீட்டாளர் வசூலித்து வங்கியில் செலுத்திய பின் அதற்கான செலானை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து அடிக்கடி இதனை வருவாய் துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதுதொடர்பாக விக்கிரவாண்டியில் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வங்கி செலானையும் நுகர்வோர் செலுத்திய மின் கட்டணத்தையும் வருவாய் பிரிவு அதிகாரிகள் தணிக்கை செய்தபொழுது ரூபாய் 3 லட்சத்து 94 ஆயிரம் பணம் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணையின் பொழுது அதே அலுவகத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளர் நாகராஜ் என்பவர் ஆவுடையார் பட்டை சேர்ந்தவர் இவர் கடந்த டிசம்பர் மாதம் நுகர்வோர்கள் செலுத்திய மின் கட்டண தொகையை செலுத்தாமல் பணத்தை கைப்பற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் மின்வாரிய துறை அதிகாரிகள் இந்த புகாரின் பெயரில் காவல்துறையினறால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது இருப்பினும் அவர் கையாடல் செய்த மொத்த தொகையையும் செலுத்தாமல் தன் உறவினர் ஒருவரிடம் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் மட்டும் பெற்று மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தியுள்ளார்.

இருப்பினும் விழுப்புரம் மின்வாரிய செயற் பொறியாளர் சைமன் சார்லஸ் அளித்த உத்தரவில் அவர் அரசு அலுவலகத்தில் பணத்தை கையாடல் செய்ததால் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |