Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் பதற்றம்!”…. 39 பேர் மாயம்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

அமெரிக்காவில் அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 39 பேர் மாயமான சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனை பார்த்த, காவல்படையினர் உடனடியாக அங்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை மீட்டனர்.

இது பற்றி அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது அந்த நபர் மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர். இந்த கும்பல், கடந்த 21ம் தேதியன்று இரவு நேரத்தில் 39 பேரை படகில் ஏற்றி பகாமா தீவிலிருந்து வந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் வானிலை மோசமடைந்து மியாமி கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கடத்தலில் ஈடுபட்ட இந்த நபரை தவிர மற்ற அனைத்து நபர்களும் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடற்படை வீரர்கள் அவர்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |